Sunday, 19 February 2012

"கைகொடுப்போம்"

வணக்கம் வருக!

ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,

அந்த அரங்கம் புரிவோம்...

"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"

இந்த வலைப்பூ "கைகொடுப்போம்" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...

கைகொடுப்போம் கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.


இவ்வண்ணம்
அரங்க  ஆற்றுகையாளர்

நடராசா கண்ணப்பு

குறிப்பு: தயவுசெய்து உங்கள்பெயரைப்பதியுங்கள், நீங்கள் உங்களின் உண்மையான பெயரைப் பதிய வேண்டிய அவசியம் இல்லை: பங்கு கொள்ளும் பாத்திரத்தின் பெயரை பதியுங்கள்.

உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்.

கீழேயுள்ள  கருத்து  - comments  எனும்  இணைப்பைச்  சொடுக்குங்கள் -click

பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.

தமிழில் எழுதகூகிள் IME நிறுவிக்கொள்ளுங்கள் இங்கே சொடுக்குங்கள்.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 19-2-2002 ஒத்திகைக்கான அரங்க செயற்பாட்டுக்கான இடமும் நேரமும் அறிவிக்கப்படுள்ளது.......

    தயா புவனா இல்லம்
    மதியம் 1 மணி

    உங்கள் பெயர்களைப் பதிவுசெய்யுங்கள் எக்ஸெல் அட்டவனையில்....

    ReplyDelete
  3. இன்றைய அரங்க ஆற்றுகையில் பேசப்பட்ட-செயல் முறைப்படுத்தப்பட்ட விடயங்கள்:

    ReplyDelete
    Replies
    1. அ. அரங்கம் விளங்கப்படுத்தப்பட்டது!
      ஆ. குழுக்கள்/பொறுப்பானவர்கள் அமைக்கப்பட்டன-
      அடுத்து அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை விளங்கப்படுத்தப்பட்டது:..

      இ. ஒவ்வொருவரும் அரங்கத்தின் வெளிப்பாட்டு செய்முறையில் ஈடுபட்டனர்.தமது பாத்திரத்தை உணர்ந்து ஒரு சிறிய வெளிப்பாட்டை செய்து காட்டினார்.

      ஈ. அரங்கத்தின் முழுமையையும் உணர்ந்தனர்.

      உ. பின்புலம்- குறியீடு- நடப்பு போன்ற மேடைப்பிரிப்பு முறையை அறிந்தனர்.

      ஊ. பாத்திரப் படைப்பு- அரங்கவாக்கம் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது என அறிந்தனர்.

      எ. மேடை- பார்வையாளர் தொடர்பு

      ஐ. கைகொடுப்போம் முழுமையாய் வடிவம் பெற தேவையான கருவிகள்-காரணிகள்- உதவிகள்- பொருட்கள்- ஆராயப்பட்டது.


      ஒ. அரங்க ஆக்கம் தொடர்பாய் - எப்படி ஒத்திகை பார்க்கபட வேண்டும். உண்மை அரங்கம் அதன் கூறுகள் - கலைஞர் பங்கு ஆராயப்பட்டது, நவீன தொழில் நுட்பம் எவ்வாறு கலைஞருக்கிடயே அரங்க வளர்ச்சிக்கு உதவும் என விளங்கப்படுத்தப்பட்டது.


      ஔ. சிக்கலான நவீன அரங்கக் கூறுகள் எவ்வாறு ஒரு அரங்கில் அனுமதிக்கப்படுகிறது, தேவையற்ற தேவைகள் நவீன அரங்கின் வெளிப்பாட்டில் என்ன பங்கை வகிக்கலாம். இயக்குனரினால் தத்துவார்த்த விளக்கம் கொடுக்கப்பட்டது.. .

      -----------

      Delete
    2. பிரதியை இங்கே பதியவில்லை- மேடையேற முன்னர் அதனை வெளியிடுவதில் எனக்கு விருப்பமில்லை, ஒவ்வொரு பங்குபெற்றும் கலைஞர்களுக்கும் அவர்களுக்கு தனிப்பட்ட பக்கத்தில் சொல்லப்படும்.

      Delete
  4. பின்புலம்:
    தாய் ( இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)
    தாத்தா( இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)


    குறியீட்டுக்குழு:

    கோழி(இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)

    குஞ்சு:(இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)

    பார்வையாளர் பகுதி:
    கணவன்:
    (இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)
    மனைவி:
    (இன்னமும் தனது குழுவில் இடம் பெறும் கலைஞர்களைத் தெரிவு செய்யவில்லை)

    ReplyDelete

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்